உரப்பற்றாக்குறை… உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் :  பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

By Kavi

|

Published on 19 May 2026, 9:25 PM

2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள், குறிப்பாக யூரியா மற்றும் டிஏபி போன்றவற்றைத் தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி  பிரதமர் மோடிக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (19.05.2026) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். , தமிழ்நாட்டில் சுமார் 48.27 இலட்சம் எக்டரில் நிகர சாகுபடியும், 62.25 இலட்சம் எக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

 தமிழ்நாட்டில் மொத்த விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர். சிறு மற்றும் குறு விவசாயிகளாவர் . இந்தியாவின் மொத்த நீர் வளங்களில் 3 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. நெல், சிறுதானியங்கள். எண்ணெய்வித்துகள், பருத்தி, கரும்பு, காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள், சுவைதாளிதப்பயிர்கள், தோட்டப்பயிர்கள் எனப் பல்வகைப்பட்ட பயிர்களின் சாகுபடி தமிழ்நாட்டில்  மேற்கொள்ளப்படுகிறது. 

2026-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளைத் துறைவாரியாக ஆய்வு செய்து  வருகிறேன். 

ADVERTISEMENT

வேளாண்மை- உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின்போது, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை . 

மேலும், மாநிலம் முழுவதும் நெல், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், தோட்டக்கலைப்பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடிப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும், தென்மேற்குப்பருவமழை மே மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கும் வானிலை ஆய்வு மையத்தினால் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுபோன்று காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

 இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் நடப்பு காரீப் பருவத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் 40 சதவீதமான 25 இலட்சம் எக்டரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தேவையான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை  எதிர்வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை நிறைவு செய்திட 3.83 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 இலட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel