முதல்வர் அறையில் ரீல்ஸ்!

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் அறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று தொடர் பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த மே 10ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது வரை 9 அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தினசரி காலை தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் வந்துவிடுகிறார்.

அவரை தினசரி பலரும் வந்து சந்திக்கின்றனர். இன்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பினர் சந்தித்தனர். தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, மேலாண்மை இயக்குநர் டாக்டர் சுனிதா ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து ஆய்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்தசூழலில் முதல்வர் விஜய் சிலருடன் பேசிக்கொண்டிருக்க, ஒருவர் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அதிகாரி ஒருவர் மீது குறை சொல்வதும் பதிவாகியிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சந்திப்பின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரீல்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் பின்னணி இசையுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே எதிர்க்கட்சியான திமுக, இது இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சி என கடுமையாக விமர்சித்து வருகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பேசியிருந்தார்.

இந்தநிலையில் முதல்வர் அறையிலேயே ரீல்ஸ் எடுத்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த ரீல்ஸுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், ரீல்ஸ் எடுத்தது யார், அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என எந்த விளக்கத்தையும் தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை.

ஆனால் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன் தான் இந்த வீடியோ எடுத்துள்ளார் எனவும், முதலமைச்சர் விஜய்யின் உரிய அனுமதி பெற்ற பிறகே அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share