அதிமுக (AIADMK) எஸ்பி வேலுமணி அணி அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா (Isakki Subbiah) தமது பதவியை ராஜினாமா செய்வதாக 2-வது கடிதத்தை இன்று மே 26-ந் தேதி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்தார்.
முன்னதாக இசக்கி சுப்பையா தமது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்தார். ஆனால், ”தட்டச்சு செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்ட அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது” என சபாநாயகர் திருப்பி அனுப்பி விட்டார்.
இதனையடுத்து 2-வது முறையாக கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து கொடுத்தார் இசக்கி சுப்பையா.
இதனால் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவின் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் தவெகவில் இணைந்தனர். இந்த 3 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டு 3 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்கக் கூடாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
