அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

By Mathi

|

Published on 26 May 2026, 11:18 AM

AIADMK 3 Constituencies Vacant

அதிமுக (AIADMK) எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் தாராபுரம், பெருந்துறை மற்றும் மதுராந்தகம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியானதாக (3 Constituencies Vacant) தமிழக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக விஜய் கடந்த மே 10-ந் தேதி பதவியேற்றார்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவின் மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும் 3 பேரும் தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய 3 தொகுதிகளும் காலியானதாக தமிழக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க கூடாது; நிராகரித்திருக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel