டெல்லி சென்ற தமிழக முதல்வர் விஜய் (Vijay), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை (Rahul Gandhi) சந்திக்காதது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று மே 28-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, ”ராகுல்- விஜய் மீட்டிங் இருக்கும் அப்படின்னு யார் சொன்னாங்க? யாருமே சொல்லலையே. அவங்க யாரும் சொல்லலையே.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார். அவர் நேற்று 6 மணிக்கு மேல பிரதமர் மீட்டிங் எல்லாம் இருந்துச்சு. டைம் கேட்டபோது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, 6 மணிக்கு மேல டைம் இல்லை நேற்று.. அதனால அந்த டைம் மேட்ச் ஆகாதனால நேற்று சந்திக்க முடியல. அடுத்த முறை முதல்வர் விஜய் டெல்லி எப்போ போறாரோ அப்ப சந்திப்பார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, முதலமைச்சர் ஜோசப் விஜயோட பதவியேற்பு விழாவுக்கே வந்தாரு. இதுல இதுல ஒன்னும் இதுல என்ன பெரிய இஸ்யூ? ஒரு இஸ்யூவே கிடையாது. மீட்டிங் இருக்குன்னு யாருமே சொன்னதும் கிடையாது” என்றார்.
