முதல்வர் விஜய்யின் டெல்லி பயணத்தில் திடீர் திருப்பம்: சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து! பின்னணி என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக முதல்வர் விஜய் அவசரமாக சென்னை கிளம்ப உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. முதல்வர் விஜய் உள்ளிட்ட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய முதல்வர் விஜய், தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். அவர்களிடம் தமிழக அரசுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று (மே 28) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் அவசரமாகச் சென்னை கிளம்ப வேண்டிய சூழல் உள்ளதால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share