கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா!

Published On:

| By Mathi

Karnataka Siddaramaiah

கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையா (Siddaramaiah) ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அம்மாநில முதல்வராக துணை முதல்வரான டிகே சிவகுமார் (DK Shivakumar) பதவியேற்க உள்ளார்.

கர்நாடகாவில் 2023 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போதே முதல்வர் பதவிக்காக டிகே சிவகுமார் முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம், டிகே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி அளித்தது.

ADVERTISEMENT

தற்போது 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சித்தராமையாவை மாற்றிவிட்டு டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் கர்நாடகாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று முதல்வர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, 3 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்குவதாக டெல்லி மேலிடம் தெரிவித்திருந்தது. ஆனால் இதனை நான் ஏற்கவில்லை என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share