கர்நாடகா (Karnataka) முதல்வர் சித்தராமையா (CM Siddaramaiah) இன்று பதவி விலகுகிறார். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக டிகே சிவகுமார் (DK Shivakumar_ பதவியேற்க உள்ளார்.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் 2023-ம் ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
கர்நாடகாவில் அரசியல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ஒக்கலிகா, லிங்காயத் ஜாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த டிகே சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்ததால் அவர் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் டெல்லி மேலிடம், மூத்த தலைவரான சித்தராமையாவை முதல்வராக்கியது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவகுமாரும் முதல்வராக பதவி வகிப்பர் என்கிற உடன்பாடு உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சித்தராமையா முதல்வராகி 3 ஆண்டுகள் ஆனதால் டிகே சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் கர்நாடகா காங்கிரஸ் சித்தராமையா கோஷ்டி, டிகே சிவகுமார் கோஷ்டி என இரண்டாக பிளவுபட்டது. கர்நாடகா அமைச்சர்களும் இரு அணிகளாக பிரிந்தனர்.
இந்த நெருக்கடி தொடர்ந்து வந்த நிலையில் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா இன்று விலக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளது.
கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்க இருக்கிறார்.









