அதிமுகவில் (AIADMK) கட்சி பதவிகள் பறிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதனையடுத்து எஸ்.பி. வேலுமணி அணியினரின் கட்சி பதவிகளை பறித்து புதியவர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி.
தற்போது அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் இன்று மே 28-ந் தேதி அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை கொண்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டாம்.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
