‘கல்கி’ பார்ட் 2-க்கு வெறித்தமான வெயிட்டிங்: ரஜினி ட்வீட்!

Published On:

| By Selvam

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன் 29) தெரிவித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் கடந்த ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ADVERTISEMENT

முன்னதாக பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுரூஷ் திரைப்படத்தின் கிராஃபிக் காட்சிகள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகள் பிரம்மிப்பூட்டும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு வலுவூட்டும் விதமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்தநிலையில், கல்கி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் அப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கல்கி திரைப்படத்தை பார்த்தேன். வாவ்… என்ன ஒரு காவிய திரைப்படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

ADVERTISEMENT

இப்படத்தில் நடித்த எனது அன்பு நண்பர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பூரண மதுவிலக்கு சாத்தியமா? – சட்டமன்றத்தில் முத்துசாமி தகவல்!

கொடநாடு வழக்கில் இன்டர்போல்… சட்டமன்றத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share