காதலில் சந்தேகம் வந்தால் முன்பு நண்பர்களிடம் கேட்பார்கள். ஆனால், இப்போது எல்லாவற்றிற்கும் ‘கூகுள் ஆண்டவர்’ தான் துணை. 2025-ம் ஆண்டு முடிவடையப் போகும் நிலையில், இந்த வருடம் முழுவதும் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய உறவுமுறை (Relationship) கேள்விகள் என்னென்ன தெரியுமா?
பட்டியலைப் பார்த்தால், “அட! எனக்கு வந்த அதே சந்தேகம் தான் ஊருக்கே வந்திருக்கா?” என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!
1. “டேட்டிங் ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு?” (Why is dating so hard?) இந்த வருடம் கூகுளில் ட்ரெண்டிங் நம்பர் 1 கேள்வி இதுதான்.
- காரணம்: “கோஸ்டிங்” (Ghosting), “சிச்சுவேஷன்ஷிப்” (Situationship) போன்ற குழப்பமான உறவு முறைகளால் மக்கள் சோர்ந்து போய்விட்டனர். உண்மையான இணைப்பைத் தேடுவது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போல ஆகிவிட்டது எனப் பலரும் கூகுளிடம் புலம்பியுள்ளனர்.
2. “உறவுப் பதற்றம் என்றால் என்ன?” (What is Relationship Anxiety?) காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது வேறு; பயம் வருவது வேறு. “அவன் என்னை விட்டுப் போயிருவானா?”, “நான் பண்றது சரியா?” என்று எந்நேரமும் பயந்துகொண்டே இருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள லட்சக்கணக்கானோர் தேடியுள்ளனர்.
- விடை: இது ஒரு வகையான மனப் பதற்றம். இது உறவை அனுபவிக்க விடாமல், எப்போதும் சந்தேகப்பட வைக்கும்.
3. “டேட்டிங் ஆப்ஸ் ஏன் இவ்வளவு மோசம்?” (Why are dating apps so bad?) டிண்டர், பம்பிள் பக்கம் போனாலே தலைவலி தான் என்று பலரும் விரக்தியில் இந்தக் கேள்வியைத் தட்டியுள்ளனர்.
- காரணம்: ஸ்வைப் செய்து சலித்துப்போன மனநிலை (Dating App Fatigue) மற்றும் அல்காரிதம் மீதான கோபம். பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கும் செயலிகளை மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.
4. “இது ரெட் ஃபிளாக்-ஆ?” (Is this a Red Flag?) முன்பெல்லாம் காதலில் குருடாக இருப்பார்கள். இப்போது விழித்துக்கொண்டார்கள். பார்ட்னர் செய்யும் சிறு தவறைக் கூட, “இது ஆபத்தான அறிகுறியா?” (Red Flag) என்று கூகுளில் அலசி ஆராய்கிறார்கள். பொசசிவ்வாக இருப்பது, பாஸ்வேர்ட் கேட்பது போன்றவை இதில் அடங்கும்.
5. “எப்போது பிரேக்கப் செய்வது?” (When to break up?) மிகவும் சோகமான, ஆனால் தவிர்க்க முடியாத கேள்வி. உறவை இழுத்துப்பிடித்துக் காப்பாற்றலாமா அல்லது இப்போதே கட் பண்ணிவிடலாமா என்ற குழப்பத்தில் பலர் கூகுளின் ஆலோசனையைக் கேட்டுள்ளனர்.
இந்தக் கேள்விகள் அனைத்தும் உணர்த்துவது ஒன்றுதான்: மக்கள் இப்போது காதலை விட, மன அமைதியையும் தெளிவையுமே அதிகம் விரும்புகிறார்கள். சந்தேகம் வந்தால் கூகுளைக் கேட்பது தப்பில்லை; ஆனால் கூகுள் சொல்லும் பதிலை விட, உங்கள் மனசாட்சி சொல்வதே சரியானது!
