டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பந்துவீச முடிவுசெய்துள்ளது. எனவே, இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். வருகிற 3ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது. அரையிறுதியைப் பொறுத்தவரை, இந்திய அணிக்கு நட்சத்திர ஆட்டக்காரர் கோலியும் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிரடி ஆட்டக்காரர் கெய்லும் பலமாக இருக்கிறார்கள். ரசிகர்கள் பார்வையில் வெல்லப்போவது கோலியா? கெய்லா? என்றே பார்க்கப்படுகிறது.









