தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை டெல்லியில் உள்ள கண்காணிப்புக் குழு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 33 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் விவரம்:
1. விளவங்கோடு – விஜயதாரிணி
2. திருத்தணி ஏஜி சிதம்பரம்
3. அம்பத்தூர் – ஹசன் மவுலானா
4. ராயபுரம் – மனோகர்
5. சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்னம்
6. கரூர் – கே.சுப்ரமணியம்
7. காட்டுமன்னார் கோயில் – கே.ஐ.மணிரத்னம்
8. ஜெயங்கொண்டம் – ஜி.ராஜேந்திரன்
9. ஓசூர் – கோபிநாத்
10. கலசப்பாக்கம் – செங்கம் ஜி.குமார்
11. ஆத்தூர் – அர்த்தநாரி
12. தென்காசி – பழனிநாடார்
13. முதுகுளத்தூர் – எஸ்.பாண்டி
14. முசிறி – எஸ்.விஜயாபாபு
15. திருச்சி கிழக்கு – ஜெரோம் ஆரோக்கியராஜ்
16. சங்ககிரி – டி.கே.ராஜேஷ்வரன்
17. நாமக்கல் – ஆர்.செழியன்
18. குளச்சல் – ஜே.ஐ.பிரின்ஸ்
19. நாங்குநேரி – ஹெச்.வசந்தகுமார்
20. திருமங்கலம் – ஆர்.ஜெயராமன்
21. மதுரை வடக்கு – வி.கார்த்திகேயன்
22. காரைக்குடி – கே.ஆர்.ராமசாமி
23. அறந்தாங்கி – எஸ்.டி.ராமச்சந்திரன்
24. தாராபுரம் – வி.எஸ்.காளிமுத்து
25. கோபிச்செட்டிப் பாளையம் – எஸ்.பி.சரவணன்
26. பட்டுக்கோட்டை – கே.மகேந்திரன்
27. பாபநாசம் – டி.ஆர்.லோகநாதன்
28. உதகமண்டலம் – ஆர்.கணேஷ்
29. சூலூர் – வி.எம்.சி. மனோகரன்
30. நன்னிலம் – எஸ்.எம்.பி. துரைவேலன்
31. வேதாரண்யம் – பி.வி. ராஜேந்திரன்
32. கோவை தெற்கு – மயூரா எஸ்.ஜெயக்குமார்
33. வேடசந்தூர் – சிவசக்தி கவுண்டர்









