கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டத்தில் ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்கும் போதே, சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக வெயிலில் இருந்ததாலும், கூட்ட நெரிசலாலும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக, சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில், ராதாகிருஷ்ணன் என்பவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், சிதம்பரத்தை சேர்ந்த கருணாகரன் டேவிட் என்பவர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஜயசாந்தி என்ற பெண் காவலர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்னிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. தேர்தல் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இந்த கொடுமைக்கு இலக்காவது எளிய மக்களே என்றும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது.
ஜெயலலிதா பொதுக்கூட்டம்: 2 பேர் பலி
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








