விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு… இடைத்தேர்தல் எப்போது?

Published On:

| By christopher

When By-Election for Vikravandi Constituency?

மக்களவைத் தேர்தலோடு விக்ரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70) மக்களவைக்கான தேர்தல் பிரச்சார வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

இதற்கிடையே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 5ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்…. பெரும் அதிர்ச்சி…!! – Seithi Solai

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி விளக்கம்!

தேர்தல் ஆணையம் விதிப்படி தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் அடுத்த மாதத்திற்குள் விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலோடு விக்ரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தற்போது தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விவாகரத்து கேட்டு தனுஷ் -ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

தெலுங்கு புத்தாண்டில் ஓடிடியில் வெளியாகிறது ’காமி’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share