விவாகரத்து கேட்டு தனுஷ் -ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

Published On:

| By Kavi

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

17 ஆண்டு கால திருமண உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கை முடித்துக் கொள்வதாக கூறி பரஸ்பரமாக விவாகரத்து கேட்டு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

2004ல் நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாததாக  அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தெலுங்கு புத்தாண்டில் ஓடிடியில் வெளியாகிறது ’காமி’

“கமல்ஹாசன் மூளையை பரிசோதிக்கணும்” : அண்ணாமலை விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share