காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுதியாகி,காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் 10ம் தேதி வெளியாகும் என்று செய்தி வெளியாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவிற்கு சுதர்சன நாச்சியப்பன் தலைமை ஏற்றுள்ளார்.தேர்தல் அறிக்கை தயாரான பிறகு எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
காங்கிரஸ் : தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு!
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
