குடியாத்தம் அருகே பாமக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

By Mathi

|

Published on 10 Nov 2026, 6:23 AM

PMK-Shot Dead

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாமக பிரமுகர் ஞானவேலு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேலு. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஞானவேலுவுக்கும் பூவரசனுக்கும் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூவரசன் தன்னிடம் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியால் ஞானவேலுவைச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஞானவேலுவும், அவருடன் இருந்த நண்பர் ரகு என்பவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஞானவேலு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

ADVERTISEMENT

ஞானவேலுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த ரகுவும் மேல்சிகிச்சைக்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாமக பிரமுகர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel