மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் பகுதியில் ‘கிருஷ்ணாநகர் எம்பி கோப்பை கால்பந்து போட்டி’ இன்று (செப்டம்பர் 19 ) நடைபெற்றது.
அந்த போட்டியில் , திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யான மஹுவா மொய்த்ரா கலந்து கொண்டு கால்பந்து விளையாடினார். அதில் அவர் சிவப்பு- ஆரஞ்சு நிற புடவையுடன் விளையாட்டு காலணிகளை அணிந்து கொண்டு கருப்பு நிற கண்ணாடியை மாட்டிக்கொண்டு விளையாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மஹுவா மொய்த்ரா கால்பந்து விளையாடிய படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ’வேடிக்கையான தருணங்கள், நான் சேலையில் விளையாடினேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக மேற்கு வங்காளம் முழுவதும் கால்பந்து போட்டிகளை ஏற்பாடு செய்தபோதும் மஹுவா மொய்த்ரா கால்பந்து விளையாடியுள்ளார்.

நேற்று (செப்டம்பர் 18 ) புதுக்கோட்டையில் நடந்த ‘மோடி லீக் கபடி’ போட்டியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேட்டியை மடித்துகட்டி கபடி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்தார் பஜ்ரங் புனியா
