உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்தார் பஜ்ரங் புனியா

Published On:

| By christopher

நடப்பு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். இந்த உலக சாம்பியன்ஷிப்பில் 4 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை புனியா பெற்றுள்ளார்.

செர்பியா தலைநகர் பெல்கிரேடில் இந்தாண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது.

ADVERTISEMENT

இறுதி நாளான நேற்று (செப்டம்பர் 18) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் 28 வயதான பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.

வெற்றிக்காக போராடிய புனியா

ADVERTISEMENT

இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளி கணக்கில் வென்ற புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் 0-6 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தார் புனியா. பின்னர் சுதாரித்து கொண்ட அவர் அடுத்தடுத்து கொடுத்த நேர்த்தியான பஞ்ச்களைக் கொடுத்து இறுதியில் 11-9 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

ADVERTISEMENT

தொடரும் புனியாவின் பதக்க வேட்டை

ஏற்கனவே 2013, 2019ஆம் ஆண்டுகளில் வெண்கலம் மற்றும் 2018ம் ஆண்டு வெள்ளி பதக்கம் ஆகியவற்றை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பஜ்ரங் புனியா வென்றிருந்தார். இந்தாண்டு அவர் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 4 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு 2 பதக்கம்!

இதேபோல் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் மூன்று முறை காமன்வெல்த் போட்டி சாம்பியனான வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு 30 மல்யுத்த வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2 பதக்கங்களுடன் திரும்பியது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆஃபர்களை அள்ளிக் கொட்டும் சேம்சங் நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share