கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!

Published On:

| By christopher

vijayalaksmi undergone medical treatment

சீமானால், தான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி  குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் இன்று (செப்டம்பர் 7) அழைத்துச் சென்றுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலியல் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் மேற்பார்வையில் மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜயலட்சுமி தனது புகாரில், சீமானால், தான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் தனக்கு நடந்தது குறித்து விஜயலட்சுமி கடந்த வாரம் வாக்குமூலம் அளித்தார்.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் மீது போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன்படி அவர் கருக்கலைப்பு செய்யப்பட்டது தொடர்பாக பரிசோதனை செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்று காலையில் விஜயலட்சுமி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த பரிசோதனையின் முடிவில் பெறப்படும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகிறார்கள்.

கிறிஸ்டோபர் ஜெமா

உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: அமித் ஷாவுக்கு கடிதம்- தமிழக பாஜகவுக்குள் போட்டி!

அதிக தியேட்டர்களில் ஜவான்: சேரன் வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share