VIDEO: விஜய்யின் ‘தெறி’ பட பாணியில் விஜய் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கள்ளக்குறிச்சியில் போராட்டம்!

By Mathi

|

Published on 26 Nov 2026, 4:26 PM

TVK MLA- DMK Protest

பாலியல் தொல்லை புகாருக்கு உள்ளாகியுள்ள தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு எதிராக விஜய்யின் ‘தெறி’ திரைப்பட பாணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இன்று (நவம்பர் 26) திமுகவினர் நூதனப் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் தொடர்பாக காவல்துறையினர் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவரின் உடலைப் பாலத்தில் தொங்கவிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியை நினைவூட்டும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நேற்று (நவம்பர் 25) தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் உருவ பொம்மையை ஐந்து கண் பாலத்தில் தொங்கவிட்டு திமுக மாணவரணியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் அருள் விக்னேஷின் உருவ பொம்மையை எரித்து திமுக மகளிரணியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று சங்கராபுரத்திலும் ‘தெறி’ பட பாணியில் திமுகவினரின் போராட்டம் நடைபெற்றறது. அப்போது தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel