விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கல் ரிலீஸ்!

By Mathi

|

Published on 7 Nov 2026, 3:26 AM

Vijay Sethupathi-Pocket Novel

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் சேதுபதி தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “The date is set for Thiagarajan Kumararaja’s Pocket Novel. Pages are turning this Pongal” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’.

ADVERTISEMENT

2019-ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதில் அவர் ஏற்றிருந்த ஷில்பா கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நடிப்புக்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதும் கிடைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியும் தியாகராஜன் குமாரராஜாவும் மீண்டும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.

ADVERTISEMENT

‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்துக்கு முதலில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இணைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இசையமைப்பாளர் மாற்றத்திற்கான காரணம் குறித்து படக்குழு விரிவான விளக்கம் அளிக்கவில்லை.

‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் தனித்துவமான திரைக்கதை அமைப்புக்காக கவனம் பெற்ற தியாகராஜன் குமாரராஜா, இந்தப் படத்தில் எந்த மாதிரியான கதையைச் சொல்ல இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel