பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குப் பின்னர் முதல்வர் விஜய் குறித்து நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசியது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஷாதிகாவின் தலைமை குறித்து விஜய் சேதுபதி பேசும்போது, வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினை மற்றும் பொறுப்பு வரும்போது எதிரணி மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைமைப் பண்பு அல்ல; அது ஏமாற்றுவேலை என்று விமர்சித்தார். இந்தப் பேச்சு முதல்வர் விஜயை மறைமுகமாகக் குறிவைத்ததாக சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.
தவெகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் குறித்து விஜய் சேதுபதி பேசியதாவது: ஜேசன் சஞ்சய்க்கு (விஜய் மகன்) Birthday wish பண்ணியிருந்தபோது, அவர் எனக்கு போன் பண்ணி, ‘நண்பா, ரொம்ப நன்றி. அவன் வந்து ரொம்ப சந்தோஷமா இருந்தான்’னு சொன்னார்.
நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. ஏன்னா, அவரே ஒரு பெரிய Superstar. அப்புறம் சஞ்சய்க்கு என்னைப் பிடிச்சிருக்கிறது எனக்கு பெரிய ஆச்சரியம்.
நான் அவன்கிட்டயே கேட்டேன், ‘ஏய், என்னடா… உங்க வீட்டிலேயே இவ்வளவு பெரிய ஆள் இருக்காரு!’ன்னு.
ஆனா அவன் ரொம்ப தங்கமான பையன். அவனுடைய படமும் இந்த படத்தோட வருது. அவன் Shoot பண்ணும்போது நான் Set-க்கு போயிருந்தேன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் ரொம்ப Cute Fellow. அப்போது என்கூட ரோகன் வந்து ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தான். நான் சஞ்சயைப் பார்க்கிறதுக்காகப் போயிருந்தேன்.
போய் பார்த்துவிட்டு, சஞ்சயோட ஒரு One Hour இருந்திருப்பேன்னு நினைக்கிறேன். Set-ல இருந்து பார்த்துட்டு, மகிழ்ச்சியா நான் வந்துட்டேன். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
