யார்தான் சந்தோசமாக இருக்கிறார்கள் !? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

mohanram.ko

ADVERTISEMENT

‘அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு புரியாம நிற்கும்போது’தான்…

ஆன்லைன்ல ஆர்டர் பண்ணனும்னு தோணுது…

ADVERTISEMENT

எனக்கொரு டவுட்டு!?

யார்தான் சந்தோசமாக இருக்கிறார்கள் !?

ADVERTISEMENT

யாரும் இல்லை, நடிக்கிறார்கள் அவ்வளவே!

ArulrajArun

அண்ணா பிறந்தநாளை ஒட்டி X தளத்தில் ஒரே ஹேஷ்டேக்கை பயன்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

– OG சிவனும் சக்தியும்; சிவனும்…

சக்தியும் சோ்ந்தா…

மாஸ்சுடா…

எதிர்த்து நின்னா…

எவனும் தூசுடா.. 

 -CNAisOurDNA

amudu

வீட்டில் அதிகம் தூசி படிந்த பொருட்களில் “வாக்கிங் ஷுவும்” ஒன்று.

ச ப் பா ணி

அண்ணா எனும் வார்த்தையை அரசியல் கட்சிகளை விட பல பெண்களே அதிகம் பயன்படுத்தியுள்ளனர்

mohanram.ko

எந்த வேலைக்கு வேணும்னாலும் போகலாம்கிற மாதிரி ஒரு படிப்பு படிக்கணும்….

அதுக்கு நீ இன்ஜினியரிங் தான் படிக்கணும்…

படிக்காதவன்

அக்டோபர் 15, 2026 முதல் UPI-ல் என்ன மாற்றம்?

ரூ.2,000 வரை செலுத்தினால் என்ன விதி?

ரூ.2,000-க்கு மேல் செலுத்தினால் என்ன விதி?

-என்ன மாற்றம்’னா

ஏமாற்றம்தான் 

என்ன விதி’னா

தலைவிதிதான்…

அண்ணாச்சி

பட்டினப்பாக்கம் வேண்டாம்; ஓமந்தூரார் மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்ற வேண்டும் – அன்பில் மகேஷ் 

-கடல் கண்ணுக்கு தெரியுமா…??

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share