லண்டன் சில்வர் ஸ்டோன் மோட்டார் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
நடிகரும் கார் ரேஸ்ருமான அஜித்குமார் பங்கேற்ற லி மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார்பந்தயம் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.
இந்த ரேசை முதல்வர் விஜய் கொடியசைத்த தொடங்கி வைத்தார்.
நேற்று இரவு 9:30 மணி அளவில் தொடங்கிய கார்பந்தயம் இரவு 11 47 மணிக்கு நிறைவடைந்தது. 50 லேப்கள் கொண்ட இந்த போட்டியில் ஏஎன்எஸ் மோட்டார் ஸ்போர்ட் அணி முதலிடம் பிடித்தது.
இரண்டாம் இடத்தை ஆர்எஸ்ஜிபி அணி பிடித்தது.
மூன்றாவது இடத்தை டீம் விராஜ் சார்பில் களம் இறங்கிய அஜித் அணி பிடித்தது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் அஜித் அணி 16 வது இடத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு முன்னேறி மூன்றாவது இடத்துக்கு சென்றது.
இதற்கிடையே பந்தயம் தொடங்கியதும் அஜித் கார் சீராக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளானது. ட்ராக்கில் இருந்து விலகிச் பக்கவாடு பகுதிக்கு சென்ற நிலையில் உடனடியாக மீட்புக் குழுவினர் பணியில் இறங்கி காரை சீரமைத்தனர்.
இந்த சூழலில் சில்வர் ஸ்டோனில் முதல்வர் விஜய், திடீரென ரேஸ் சூட் போட்டுக்கொண்டு கிக் ஸ்கூட்டரில் வலம் வந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
ரேஸ் முடிந்ததும் மீண்டும் அஜித் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர்.
