சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை : தொடங்கியது இறுதி ஊர்வலம்!

Published On:

| By Kavi

மறைந்த பேராசிரியரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான சாலமன் பாப்பையா தனது 90 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். 

ADVERTISEMENT

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சாலமன் பாப்பையாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அவரது உடலுக்கு திண்டுக்கல் லியோனி, பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

ADVERTISEMENT

அமைச்சர் நிர்மல் குமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் நேரில் மாலை போட்டு மரியாதை செலுத்தினார்கள். 

இந்த சூழலில் இன்று சாலமன் பாப்பையாவின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இதற்கிடையே அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

சாலமன் பாப்பையா தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share