புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இன்று (செப்டம்பர் 11) காலமானார்.
மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிந்தார்.
இவரது மனைவி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார்.
இந்தநிலையில் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
அவரது மறைவு தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த தமிழ்ப் பட்டிமன்றங்களை நடத்தி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் புகழ்பெற்றார்.
ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ உட்பட சில தமிழ் திரைப்படங்களிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
