மாஸ்டர் பட வாய்ப்பு… த்ரிஷா அனுப்பிய மெசேஜ்: சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்த மாளவிகா

Published On:

| By Kavi

நடிகை மாளவிகா மோகனன், திரிஷா பற்றி பேசியிருப்பது கவனத்தை பெற்றுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். 

ADVERTISEMENT

வாரணாசி புறநகர் பகுதியில் இந்த படம் எடுத்துக் கொண்டிருந்தபோது திரிஷாவுடன் ஏற்பட்ட நட்பு குறித்து மாளவிகா பேசியுள்ளார். 

எஸ் எஸ் மியூசிக் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் பேட்ட படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சில நாட்கள் திரிஷாவுடன் நடிக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் நான் முற்றிலும் புது முகமாக இருந்தேன். அதுதான் எனது முதல் தமிழ் படம். அதுவரை பெரிய படங்களிலோ அல்லது கமர்சியல் படங்களிலோ நடித்ததில்லை. 

ADVERTISEMENT

20 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் த்ரிஷா படப்பிடிப்பின் இடைவெளிகளில் எளிமையாக தனியாகவே இருந்திருக்கலாம். 

ஆனால் அவர் என்னிடம் அன்பாக நட்பாக நடந்து கொண்டார். என்னை மிகவும் சௌகரியமாக உணர வைத்தார். நிறைய பேசுவார். எங்களுடன் நேரத்தைச் செலவிடுவார். 

ADVERTISEMENT

அவரின் இத்தகைய நடத்தை தனித்துவமாக தெரிந்தது. இது மிகவும் அரிதானது. 

அப்போது லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் முதல்வர் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமான போது தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

ஹாய் பேபி… உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகப்பெரிய வாய்ப்பு வாழ்த்துக்கள் என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இப்படி எல்லாம் சொல்வதற்கு மிகப்பெரிய மனது வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share