நடிகர் அஜித் குமார் அணி பங்கேற்கும் கார்பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
நடிகர், அஜித் குமார் ரேசிங் அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த கார்பந்தயப் போட்டியை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் இன்று இரவு சென்னையில் இருந்து விமான மூலம் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக செல்லும் முதல்வர் விஜய் உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுவார் என்றும் தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வரும் 17ஆம் தேதி மீண்டும் விஜய் சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் விஜயின் இந்த இங்கிலாந்து பயணத்தின் போது, சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரை தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து லு மான்ஸ் கோப்பை அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ” இந்த வார இறுதியில் சில்வர்ஸ்டோனில் சிறப்பு விருந்தினர் ஒருவர் கலந்து கொள்கிறார். அவர் சி ஜோசப் விஜய்.
இந்திய ஓட்டுனர்களை ஆதரிக்கும் வகையில் 44 கார்கள் அணிவகுக்கும் SilverstoneRound பந்தயத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பதற்காகவும் நம்முடன் இணையவுள்ளார்.
வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள இந்த பந்தயத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
