கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி

Published On:

| By Pandeeswari Gurusamy

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு உடல்நலக் குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக கொளத்தூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி. எஸ். பாபு, சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

முன்னதாக திமுகவில் பயணித்த வி. எஸ். பாபு, கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலிலேயே புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர்.

இதனைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து விலகிய வி. எஸ். பாபு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெகவில் இணைந்த அவர் கொளத்தூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்ற பிறகு சைகை செய்து காட்டியது இணையதளங்களில் வைரலானது.

ADVERTISEMENT

இந்நிலையில், வி. எஸ். பாபுவிற்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share