அஜித்துடன் ஜாலி உரையாடல்… சில்வர் ஸ்டோனுக்கு சென்ற பிரபல நடிகை!

Published On:

| By Kavi

நடிகர் அஜித்குமாரை நடிகை ராதிகா ரேசிங் களத்தில் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரிட்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் மைதானத்தில், நடைபெறும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி பங்கேற்கிறது. 

ADVERTISEMENT

இந்த கார்பந்தயத்தை முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை போட்டியை நடத்தும் லீ மென்ஸ் கப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று நடிகை ராதிகா சரத்குமார் சில்வர் ஸ்டோன் ரேஸ் களத்துக்கு சென்று அஜித் குமாரை சந்தித்து பேசியுள்ளார். 

ADVERTISEMENT

இருவரும் அமர்ந்து ஜாலியாக உரையாடும் காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

திரையுலகில் நண்பர்களாக இருக்கும் அஜித் மற்றும் ராதிகாவின் இந்த அன்பு பரிமாற்ற வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

நடிகை திரிஷாவின் 73 வது படத்தின் படபிடிப்பு லண்டனில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ராதிகாவும் நடிக்கிறார். இதன் காரணமாக திரிஷா, ராதிகா உள்ளிட்ட பட குழுவினர் லண்டனில் தங்கியுள்ளனர்.

த்ரிஷாவுடன் செல்பி எடுத்த புகைப்படத்தையும் ராதிகா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

நாளை முதல்வர் தொடங்கி வைக்கும் இந்த கார் ரேசை ஏராளமான தமிழ் பிரபலங்கள்  கண்டு ரசிக்கலாம் என தகவல்கள் வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share