வீடியோ: அஜித்தை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்த விஜய்

Published On:

| By Kavi

சில்வர்ஸ்டோனில் நடிகர் அஜித்தை முதல்வர் விஜய் ஓடிவந்து கட்டியணைத்து முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்குள்ள சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறும் கார் பந்தையத்தையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணியும் பங்கேற்கிறது.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்துக்கு முதல்வர் விஜய் சென்றார்.

அங்கு நடிகரும் ரேசருமான அஜித்தை பார்த்ததும், ஓடி வந்து கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ADVERTISEMENT

இதுமட்டுமின்றி தலைவர் சூட்டுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறிய வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இருவரும் எப்போது சந்திப்பார்கள் என விஜய் – அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தநிலையில் இருவரும் பந்தய களத்தில் தோள் மேல் கைபோட்டு ரசிகர்களை பார்த்து கையசைத்தது போது அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ADVERTISEMENT

தொடர்ந்து விஜய் – அஜித் குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share