தமிழகத்தில் கொலை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போராட்டம் என பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.
அதில், ”What is the procedure to contact an alien spaceship and get beamed out of this planet?” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ”வேற்றுக்கிரக விண்கலத்தைத் தொடர்புகொண்டு…இந்தப் பூமியிலிருந்து வெளியேறிச் செல்வதற்கான நடைமுறை என்ன?” என்று கேட்டுள்ளார்.
கிருத்திகா உதயநிதி சமூக வலைதளங்களில் நேரடியாகப் பேசாமல், மறைமுகமாகச் சில கருத்துகளைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
திரைப்பட இயக்குநராக இருக்கும் கிருத்திகா உதயநிதி, சினிமா அல்லது சமூக நடப்புகள் குறித்த தனது சலிப்பை வெளிப்படுத்த இதுபோன்று கிரிப்டிக் (மறைமுக) பதிவுகளை போட்டிருக்கலாம் .
நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பார்த்து தான் இந்த பூமியை விட்டே போக வேண்டும் என்ற எண்ணத்தில் விரக்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
