’எதிரணி மீது பழியை போட்டு தெறிச்சு ஓடுபவரா லீடர்? பிக்பாஸில் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?

Published On:

| By Mathi

Vijay Sethupathi Criticize Vijay

ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 10-ல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஜியோ ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 6-ந் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 10 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் சனிக்கிழமைதான் முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடினார்.

ADVERTISEMENT

இது தொடர்பான ப்ரமோக்களில், “உங்களுடைய ஆட்சி ஏன் கவிழ்ந்தது?”, “கொடுத்த வாக்குறுதியின்படி நடந்துகொண்டீர்களா?” என்று போட்டியாளர்களிடம் அவர் கேள்வி எழுப்புவது இடம் பெற்றிருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு பிக்பாஸ் வீட்டில் கேப்டன் ஷாதிகா தமது தலைமைப் தலைமைப் பொறுப்பை சரியாக செய்தாரா என்கிற கேள்வியை முன்வைத்தார் விஜய் சேதுபதி.

ADVERTISEMENT

பின்னர் ஷாதிகாவிடம் கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, “நீங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி நடந்துகொண்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு ஷாதிகா, “இல்லை” என்று பதிலளித்தார். தொடர்ந்து மற்ற போட்டியாளர்களிடமும் ஷாதிகாவின் தலைமை குறித்து கருத்துகளைக் கேட்டார்.

மீண்டும் ஷாதிகாவிடம் விசாரித்த விஜய் சேதுபதி, “லீடர்னா என்னன்னே தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு லீடருக்கான குவாலிட்டி இல்லை. அது ஏமாற்றுவேலை” என்று கடுமையாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

“வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுப்பது”, “பிரச்சினையும் பொறுப்பும் வந்ததும் எதிரணி மீது பழியைப் போடுவது”, “அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான குவாலிட்டி இல்லை” என்று விஜய் சேதுபதி பயன்படுத்திய வார்த்தைகள், முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் வீட்டின் கேப்டனை நோக்கி விஜய் சேதுபதி கூறிய கருத்துகள், தற்போதைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதால் இந்தப் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. அதேநேரத்தில், விஜய் சேதுபதி அரசியல் நோக்கத்துடன்தான் இவ்வாறு பேசினாரா அல்லது பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்டாரா என்பது குறித்து அவர் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share