Bigg Boss Controversy: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யை நடிகர் விஜய் சேதுபதி விமர்சனம் செய்ததற்கு காமெடி நடிகர் கூல் சுரேஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி, “லீடர்னா என்னன்னே தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு லீடருக்கான குவாலிட்டி இல்லை. அது ஏமாற்றுவேலை” என விமர்சித்தார். முதல்வர் விஜய்யை மறைமுகமாக விஜய் சேதுபதி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய நடிகர் கூல் சுரேஷ், “எனக்கு பிக்பாஸ் பிடிக்காது.. காரி துப்புவேன்.. கனத்த இதயத்துடன் சொல்வேன்.. நானும் பிக்பாஸ் போய் அந்த சோத்தை திண்ணுட்டு வந்தவன்..விஜய் சேதுபதி சோத்துல உப்பை போட்டு தின்கிறவர்.. விஜய் சேதுபதி பிக்பாஸை விட்டு வரலைன்னா இன்னும் என்ன என்ன அவமானத்தை சந்திப்பாரோ?
விஜய் சாரை விஜய் சேதுபதி பேசுனதா எல்லாரும் சொல்றீங்க.. நாளைக்கு பிரதமரை அடுத்தவாரம் அமெரிக்கா அதிபரை பத்தி பேசுவாங்க..
அதனால் பிக்பாஸ் என்பது தடை செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி. அதனால விஜய் சேதுபதி சார்.. உங்களுக்கு வார்னிங் கொடுக்குறேன்னு வெச்சுக்கங்க.. தயவு செய்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நீங்க வெளியே வந்துடுங்க..
ஏன்னா இதன் பிறகு, தவெக தொண்டர்கள், விஜய் சாரின் ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.. பிக்பாஸ் சூட்டிங் நடக்கும் ஈவிபி கார்டன் பகுதி.. விஜய் சார் மேல பாசம் உள்ளவங்க அவ்வளவு வெறியில இருக்காங்க.. அதனால நமக்கு எதுக்கு வம்புன்னு விஜய் சேதுபதி சார் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வாங்க.. நகைக் கடை விளம்பரத்துக்கு போறீங்க.. காசு வருது இல்ல.. பல குடும்பத்தை கெடுத்துகிட்டு இருக்க இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வேணுமா?” என்றார்.
