பிக்பாஸில் விஜய் மீது விமர்சனம்.. விஜய் சேதுபதி மீது பாயும் தவெக! ரணகளமாகும் சோசியல் மீடியா!

Published On:

| By Mathi

விஜய் சேதுபதி மீது தவெக தாக்கு

Bigg Boss: ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 10-ஐ தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதியின் முதல்வர் விஜய் மீதான மறைமுக விமர்சனங்கள் தவெகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் தவெகவினர், விஜய் சேதுபதியை மிக மோசமாக இழிவுபடுத்தி விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு ‘பதிலடியான’ கருத்துகளும் பதிவிடப்பட்டுகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “லீடர்னா என்னன்னே தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு லீடருக்கான குவாலிட்டி இல்லை. அது ஏமாற்றுவேலை” என விமர்சித்தார். முதல்வர் விஜய்யைதான் விஜய் சேதுபதி இப்படி விமர்சித்ததாக சர்ச்சை வெடித்தது.

ADVERTISEMENT

ரணகளமான சோசியல் மீடியா

இதனையடுத்து சமூக வலைதளங்களை ரணகமளமாக்கி இருக்கும் விஜய் சேதுபதி Vs விஜய் விவகாரத்தில் X பக்கத்தில் பதிவான சில கருத்துகள்:

@TheEagle3_0 : விஜய் டிவி நிறுவனம், வாய்க்கொழுப்பு நடிகர் விஜய் சேதுபதி சேதுபதியை நிகழ்ச்சியை விட்டு நீக்கும் வரை மற்றும் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியை ஸ்பான்சர் Sponser செய்யும்

ADVERTISEMENT

1.டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் 2.ஏசியன் பெயிண்ட்ஸ்
3. Surf Excel
4.ஜோஸ் ஆலுக்காஸ் Jos Alukkas
5.டிடிகே பிரெஸ்டிஜ்
6.கே ஏ ஜி டைல்ஸ் (KAG tiles)
விஜய் சேதுபதியின் பினாமி நிறுவனம்.
7. Eyetex Dazzler
8.Cadburys 5 ஸ்டார்
9.அணில் சேமியா
10.Continental Extra Coffee
11. Aroma Ghee

விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுக்கும் மேற்கூறிய அனைத்து நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை புறக்கணிப்போம் .

ADVERTISEMENT

சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வாய்க்கொழுப்பு நடிகர் விஜய் சேதுபதியை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்காதது ஏன்?

@saijegadheeshh: தொடர்ந்து வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் தோற்றுப் போன நடிகர் விஜய் சேதுபதி. தன்னை ஒரு பெரிய பக்கோடாவாக நினைத்துக் கொண்டு அதிக பிரசங்கித்தனமாக பேசி வருவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் போது விஜயின் மீது அன்பு பொழிவதை போல் தாங்கள் காட்டிக்கொண்டதெல்லாம் வெறும் நடிப்புதான் என்பதை நாங்கள் இப்போதுதான் புரிந்து கொள்கிறோம். பல இடங்களில் விஜயை சிறுமைபடுத்துவதையும் அவருக்கு எதிரான கருத்துக்களையும் தொடர்ந்து நீங்கள் பேசி வருவது சரியானது அல்ல.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதும் வான்டடா வந்து வம்புக்கு இழுத்தீங்க… தேர்தல் சமயத்திலும் இதே போன்ற ஒரு கேவலமான கருத்தை சொன்னீர்கள். இப்போது மீண்டும் அதே பாணியில் இறங்கி இருக்கிறீர்கள்.

உண்மையாகவே தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை எதிர்க்க வேண்டும் என்றால் அரசியல் களத்திற்கு நேரடியாக வாருங்கள்… அதை விட்டுவிட்டு ஊசிப்போன பக்கோடா போல் ஊளை உதாரர் விடக்கூடாது.

நீங்கள் போனியாக வேண்டும் என்பதற்காக மற்றவர்களை இழிவு படுத்துவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நிறுத்த வைப்போம்.

This is last warning for you @VijaySethuOffl அவரோட கால் தூசிக்கு வருவியா மேன் நீ?

@Sha37929513: போதைப்பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் உடன் இந்த அதிமேதாவி
@VijaySethuOffl போதைப்பொருள் சப்ளை எல்லாம் ஸ்டாப் ஆகிடுச்சாம்…
இன்வெஸ்ட்மென்ட் போச்சு, லாஸ் ஆயிடுச்சாம்…இப்போ புரியுதா ஏன் Bigboss நிகழ்ச்சில வாந்தி எடுத்தார்னு. அதனாலதான் விஜய் அண்ணன் மேல இவ்வளவு வன்மம்

@iSethuuuu: விஜய் சேதுபதி பிக்பாஸ் ஷோ உள்ள டாஸ்க் சம்பந்தமா Contestents கிட்ட பேசுற விஷயம் அப்படியே விஜய்க்கு பொருத்தமா இருக்குனு விஜய் ரசிகர்களே நம்புறானுங்க, தான் தலைவன் ஒரு தற்குறினு அவனுகளுக்கே தெரிஞ்சிருக்கு, அதனாலதான் ரெண்டு நாளா vjs ah வெறி கொண்டு abuse பண்ணிட்டு இருக்கானுங்க..

@_makeanoffer: பிக்பாஸே ஒரு தற்குறித்தனமா நிகழ்ச்சி தான். அங்க போய் அரசியல் பேசுறதுக்கு இன்ஸ்டால ரீல்ஸ் போட்டுட்டு போகலாம். விஜய் & TVK வை எதிர்த்து VJS என்ன யார்னாலும் பேசட்டும் ஆனா மொக்கை நிகழ்ச்சிக்கு மைலேஜ் கொடுக்க தமிழக அரசியலை யூஸ் பண்ண வேண்டாம்னு சொல்றேன்.

@BhimROCKY: விஜய் சேதுபதி வருகைக்கு பிறகு Bigg Boss பார்ப்பது பெரிதும் குறைந்துவிட்டது. அதனால் பரபரப்பை ஏற்படுத்த + திமுக சொம்பு தூக்க முதல்வர் விஜயை தாக்கியுள்ளார். பார்க்க மீசையில்லாத மிஷ்கின் மாதிரியே இருக்கும் இவர் மிஷ்கின் மாதிரியே மிதி வாங்க போகிறார்.

@kadavansurya: விஜய் சேதுபதி பிக் பாஸில் லீடர்ஷிப் பத்தி பேசியதற்கு விஜய் ரசிகர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது

@Venkat_Speaksss: விஜய் சேதுபதி பேசும் போது யார் பெயரையும் குறிப்பிடல…
எந்த சம்பவத்தையும் அடையாளம் காட்டல… பிக்பாஸ் வீட்டுக்குள்ள தலைமை சரியில்ல அப்படின்னு அதுக்கு விமர்சனம் செய்ததை… திமுக காரங்க அவங்களுக்கு ஆதரவா படம் பயன்படுத்துகிறார்கள் அது சரி… ஆனால் நம்ம தலைவர தான் விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார் அப்படின்னு தவெக காரங்க உங்களுக்கு உரைக்குதே..!!! அப்போ.. விஜய் தலைமை சரியில்லன்னு தவெக கட்சிக்காரங்களே ஒத்துக்குறாங்களா??

@Autokabeer: தெறித்து ஓடுவது தலைமை பண்பா? லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்னா என்னன்னு தெரியாம, வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு, பிரச்சனைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டு, அங்க இருந்து தெறிச்சு ஓடுறதுங்கிறது leader-க்கான quality இல்ல. அது ஏமாத்து வேலை.

@Jasmine01737661: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்! விஜய் சேதுபதி Big Boss நிகழ்வில் பேசியது அங்கு நடந்த மோதலுக்கு அவர் கொடுத்த அறிவுரை! விளக்கம்!

அதை தற்குறிகள் தங்களைப் பற்றிய விமர்சனம் என்று எண்ணிக் கொண்டால் அதற்கு விஜய் சேதுபதி என்ன செய்ய முடியும்?

@B_alert_ji: எவ்வளவு பெரிய அயோக்கிய கூட்டம் பாருங்க..எல்லா கட்சியும் எல்லா ஆட்சியும் எல்லா தலைவரும் விமர்சனதுக்கு உட்பட்டவர்கள். கடந்த காலத்துல நடந்த ஒன்றுதான்… ஆனால் இவனுக எந்த அளவுக்கு போறானுக பாருங்க இது பேர்தான் பாசிசம்… உங்க அண்ணன் ஸ்டைலில் சொன்னா பாயாசம்.. 🤧 விஷ செடிகள் tvk யன்ஸ்

@iamksnstr: விஜய் சேதுபதி, நீங்க தளபதி முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து இது வரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. அப்போதே எங்களுக்கு தெரியும் நீங்க பொறாமையில இருக்கீங்க என .. உங்க மார்க்கெட் ஏற்கனவே சரிந்ததால தான் கேடுகெட்ட பிக்பாஸ் ஷோவிற்கு போனீங்க.. உங்க வன்மத்தை நீங்க காட்டிட்டீங்க. இனி உங்க படங்களை VIRTUAL WARRIORS பார்த்துபாங்க. ALL THE BEST வன்ம சேதுபதி

@syed2029: பரவாயில்லை விஜய் சேதுபதி தலைமை பண்பு பற்றி பேசினாது விஜயை பற்றி தான் என்ற புரிதால் இருக்கு அதற்க்காக தற்குறிகளை பாராட்டலாம்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share