இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
“AI குறித்து தேவையில்லாத பயம் வேண்டாம்!” -ட்ரம்ப்
-இப்போ தான் எனக்கு பெரிய பயமே .

ச ப் பா ணி
லீவு முடிஞ்சு நாளை வேலைக்கு போக நினைக்கும் போது
முதுகுவலி, தலைவலி, உடல் அசதி

balebalu
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் கிடுகிடு உயர்வு , மக்கள் அதிர்ச்சி – செய்தி
இதுக்கே அதிர்ச்சியானா எப்படி
இன்னும் ஆயுத பூஜை, தீபாவளி எல்லாம் இருக்கு
உடம்பை இரும்பாக்கிகடா கரிகாலா

Mannar & company
ஊர்ல இருக்கும்போது, “இன்னும் ரெண்டு நாள் இருந்திருக்கலாம்”ன்னு தோணும்.
வெளியூருக்கு வந்ததும், “இன்னும் ரெண்டு நாள் லீவு இருந்திருக்கலாம்”ன்னு தோணும்.
மனுஷன் எங்க இருந்தாலும், வேலைக்குப் போகாம இருக்கத்தான் ஆசைப்படுறான்!

ArulrajArun
My friend; ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
Me ; ஏனோ வானிலை மாறுல எல் நினோ னால தான் வானிலை மாறுது Next..

ச ப் பா ணி
மச்சி..அவ மனசில இடம்பிடிக்க ஒரு யோசனை சொல்லுடா
நானே காலைல பஸ்ஸில இடம்பிடிக்க தெரியாதவண்டா

Mannar & company
பண்டிகைக்கு ஊருக்குப் போகணும்னு நினைச்சா,
முதல்ல கிளாம்பாக்கத்துலயே ஒரு பண்டிகையை முடிச்சுட்டுத்தான் ஊருக்கு போகணும் போல!

அண்ணாச்சி
தோழர்கள் தனித்து போட்டி…
but தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும்..
-இவங்க character யே புரிஞ்சிக்க முடியல
லாக் ஆப்
