தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்க தவெக விற்கு மேலும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தவெக தலைவர் விஜய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் செயற்குழு மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
