அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களான சிவி சண்முகம், கேபி முனுசாமி
எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, எடப்பாடி பழனிசாமியை நேற்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பேசியிருப்பதாக சொல்லி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து அதிமுக தோல்வியை தழுவி வருகிறது. இந்த முறை பல இடங்களில் டெபாசிட்டே இழந்துவிட்டது அதிமுக. அதனால் இனியும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்காமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்” என்றனர்.
இதனிடையே சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவின் 35 எம்.எல்.ஏ.க்கள் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுக்க இருக்கின்றனர்.
மேலும் சட்டசபையில் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சிவி சண்முகத்தை எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.
மேலும் ”எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்; தவெகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என நேற்று பேட்டி கொடுத்த லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டினை சிவி சண்முகம் கடுமையாக கண்டித்துள்ளார்.
