சிவி சண்முகம் வீட்டில் 35 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்- விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு?

Published On:

| By Mathi

bomb threat for aiadmk headquarters

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்.பி. வீட்டில் அக்கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ளது விஜய்யின் தவெக. விஜய் கட்சி ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

ADVERTISEMENT

விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் தவெகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் காங்கிரஸ் ஆதரவை விஜய் கோரியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் இன்று முடிவெடுக்க உள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம் வீட்டில் 35 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு 35 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளிக்கக் கூடும். நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று, தவெகவின் செங்கோட்டையன், அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களை கொத்தாக வளைக்க உள்ளார் என பதிவிட்டிருந்தோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 35 பேர் சிவி சண்முகம் வீட்டில் ஒன்று திரண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே சென்னையில் இன்று நடைபெற இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share