வைஃபை ஆன் செய்ததும், “சின்ன தம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு” பாடலை ஒலிக்கவிட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
வாருமய்யா.. எலக்ஷன் திருவிழாவை முடிச்சுட்டீரே..
திருவிழா முடிஞ்சதுதான்.. அதுவும் திருப்பங்கள் நிறைந்த திருவிழாவா முடிஞ்சு போச்சுதான்.. விஜய் தவெக 108 சீட் ஜெயிச்சிருக்கு.. விஜய் ரெண்டு இடத்துல ஜெயிச்சதால் ஒன்னை ராஜினாமா செய்யனும்.. ஸோ 107 இடங்கள்தான்.. மெஜாரிட்டிக்கு இன்னும் 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைங்கிறதுதான் இப்ப இருக்கிற நிலவரம்..
அதெல்லாம்.. ஏதாவது மூவ்கள் நடக்காமலா இருக்கும்? அதை பத்தி விசாரிச்சீரா?
ஏகப்பட்ட மூவ்கள் நடந்துகிட்டே இருக்குது..
காங்கிரஸ்கிட்ட 5, சிபிஐ-சிபிஐஎம் கிட்ட 4, முஸ்லிம் லீக் 2, விசிக 2, தேமுதிக1, பாமக 4, அமமுக 1 எம்.எல்.ஏ. வைச்சிருக்காங்க..
இதுல எந்த கட்சியெல்லாம் விஜய் தவெக ஆட்சி அமைக்க ஆதர தரும்? அப்படிங்கிறதுங்கிறதான் ஹாட் டிபேட்.
இந்த பரபரப்புக்கு நடுவுலதான் அறிவாலயத்துல ஸ்டாலினை வைகோ, சிபிஎம் சண்முகம் ,சிபிஐ வீரபாண்டியன்னு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் சந்திச்சிருக்காங்க..
ஸ்டாலினை சந்திச்ச பிறகு பிரஸ் மீட்டில் பேசுன வைகோ, “எங்க கிட்ட எல்லாம் ஆதரவு கேட்கனும்கூட தவெக நினைக்காது.. எங்க பக்கம் கூட வரமாட்டாங்க.. திமுக கூட்டணியில இருக்கிற எந்த கட்சியையுமே அவங்க தொடர்பு கொள்ளலைன்னு தெரியுது.. கூட்டணி கட்சிங்க யாரும் தவெகவை ஆதரிக்கமாட்டங்க”ன்னு சொல்லி இருந்தார்.
இதே மாதிரி சிபிஐ வீரபாண்டியன், சிபிஎம் சண்முகமும் பிரஸ்ஸை மீட் பண்ணினாங்க.. அப்ப சிபிஎம் சண்முகம், “தவெக இன்னும் எங்களை அழைக்கலையே.. அவங்க அழைச்ச பிறகு எங்க மாநில கமிட்டியை கூட்டி முடிவெடுப்போம்”னு சொல்றாரு
சிபிஐ வீரபாண்டியனும்,”அப்பீசியலா தவெக எங்களை இதுவரைக்கும் அழைச்சு பேசுலையே.. அப்படியே ஆதரவு தாங்கன்னு தவெக கேட்டுகிட்டாலும் கூட எங்க மாநிலக் குழு கூடிதான் முடிவு செய்யும்”னு சொல்லி இருக்கார்..
பிரேமலதா வெளியிட்ட அறிக்கையிலும், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலதான் தேமுதிக தொடர்ந்து நீடிக்கும்”னு சொல்லி இருக்கிறார்.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “நான் ஏற்கனவே ஒரு ரிப்போர்ட் மேலிடத்துக்கு கொடுத்துட்டேன்.. என்ன செய்யனும்னு இனி மேலிடம்தான் முடிவு செய்யனும்”னு சொல்றாரு..
என்னதான் எல்லாருமே இப்படி வெளிப்படையா சொல்லிகிட்டே இருந்தாலும் ஜரூரா சில மூவ்ஸ், பேச்சுவார்த்தைஸ் நடந்துகிட்டுதான் இருக்குது..
இதை பத்தி விசாரிச்சப்ப, “விஜய்கிட்ட ஏற்கனவே ராகுல் காந்தி போனில பேசிட்டாரு.. விஜய் கூட கூட்டணி வைத்தே ஆகனும்னு அடம்பிடிச்சு திமுக கூட்டணியில குட்டைய குழப்பின பிரவீன் சக்கரவர்த்தி போன்றவங்க தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தரனும்னு உறுதியா இருக்காங்க.. விஜய் தரப்புடன் காங்கிரஸ் தீவிரமா பேச்சுவார்த்தை நடத்துது.. இந்த பேச்சுவார்த்தையில, “நாங்க 5 எம்.எல்.ஏக்கள், எங்களோட லெப்ட் பார்ட்டீஸ் 4, முஸ்லிம் லீக் 2-ன்னு மொத்தம் 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தர்றோம்.. இந்த ‘பேக்கேஜ்’ ஆதரவுக்கு என்ன மாதிரி ‘பிரதிபலன்’ன்னு பேசுவோம்”னு சொல்லுதாம் காங்கிரஸ்.
அப்ப தவெக சைடுல இருந்து ”சிபிஐ- சிபிஎம் எப்படி ஆதரிப்பாங்க?”ன்னு கேட்டதுக்கு, “பாஜக உள்ளே வராம தடுக்க நாங்க தவெகவை ஆதரிப்போம்னு அவங்க சொல்லுவாங்க”ன்னு காங்கிரஸ் பதில் சொல்லி இருக்கு..
தவெககிட்ட பேசுறதோட இல்லாம ஸ்டாலினை தொடர்பு கொண்ட ராகுல் தரப்பு, “தவெக ஆட்சி அமைக்கிறதுக்கு நாங்க ஆதரவு கொடுத்தாலும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில நாம எல்லாம் ஒன்னாகவே இருப்போம்”னு சொல்லி இருக்காங்கய்யா.. இந்த மெசேஜை ஸ்டாலின் தரப்பு ‘சீரியசா’ எடுத்துக்கிட்ட மாதிரி தெரியலைன்னும் சொல்றாங்க
போற போக்கைப் பார்த்தா இடதுசாரிகள், காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிகன்னு எல்லாரும் மொத்தமா திமுக கூட்டணியில இருந்து வெளியேறினாலும் ஆச்சரியமில்லைய்யா..
ஓஹோ.. தவெக கூட்டணி ஆட்சியை விசிக ஆதரிக்குமா?
ரொம்ப காலமா அதிகாரப் பகிர்வு- ஆட்சியில் பங்குன்னு சொல்ற கட்சிதான் விசிக.. இன்னைக்கு கூட தேர்தல் முடிவை பத்தி திருமா வெளியிட்ட அறிக்கையில, “எலக்ஷன்ல நாங்க அதிமுக- பாஜகவைத்தான் கடுமையா எதிர்த்தோம்.. தவெக முன்னிறுத்தி எதிர்க்கலை.. விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியைத் தான் தமிழக மக்களும் வழிமொழிஞ்சிருக்காங்க.. இது நுட்பமான அரசியல்”னு பொடி வெச்சிருக்கிறார்..
சென்னையில இன்னைக்கு பிரஸ் மீட்டுல பேசுறப்பவும் கூட, “ தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தர்றது பத்தி நாங்கள் இதுவரை எதுவும் சிந்திக்கவில்லை, முடிவெடுக்கவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம். உங்கள மாதிரிதான் நாங்களும் ஸ்பெக்டேட்டரா இருக்கோம்”னு திருமாவளவன் சொல்லி இருக்கிறாரு..
தவெகவுக்கு ஆதரவு இல்லையா?ன்னு கேள்வி கேட்டதுக்கு, “உங்க யூகத்துக்கு என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க”ன்னு அங்கேயும் பொடி வெச்சுட்டு போயிருக்காரு..
அதே மாதிரிதான் பாமகவும்.. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்து அமைச்சரவையில இடம் கேட்கலாமான்னு ஆலோசனை நடத்திகிட்டு இருக்குதாம்.. இதை பத்தி விசாரிச்சப்ப, “சவுமியா அன்புமணி இந்த முறை எம்.எல்.ஏ.வா ஜெயிச்சுட்டாங்க.. தவெகவை ஆதரிச்சா சவுமியா அமைச்சராக முடியுமா?”ன்னு அன்புமணி குடும்பம் சீரியசா பேசிகிட்டு இருக்குது..
ஆனா, “பாமக ஆதரவே கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லலாம்னுதான் இருக்கோம்.. ஏன்னா கூட்டணி ஆட்சியில அன்புமணி ரொம்பவே டாமினேட் செய்ய நினைப்பாரு.. நான் சென்ட்ரல் மினிஸ்ட்ரா இருந்தேன்.. இதை அப்படி செய்யனும்.. இப்படி செய்யனும்னு ரொம்பவே தலையிடுவாருன்னு நினைக்கிறோம். . அதனால எங்க லிஸ்ட்ல பாமகவே இல்லை”ன்னு தவெக சொல்லுதுய்யா..
தவெக தரப்புல என்ன மூவ் செய்யுறாங்களாம்?
தவெக தரப்புல விசாரிச்சப்ப, “காங்கிரஸ் மாதிரி வேற கட்சிகளோட ஆதரவோட ஆட்சி நடத்துனா ரொம்ப காலத்துக்கு கஷ்டமா இருக்கும்.. முக்கியமான மசோதாக்களை கொண்டு வந்தா நிறைவேத்துற எல்லாம் ரொம்ப ஈஸியாகவும் இருக்காது..
அதனால அதிமுகவில இருந்து ‘பல்க்கா’ எம்.எல்.ஏக்களை ‘தூக்கிடலாமா’ன்னு செங்கோட்டையன் சைடுல தீவிர முயற்சியும் நடக்குது”ன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
