முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

17 ஆவது தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். கவர்னர் மாளிகைச் செயலாளர் மூலமாக அந்தக் கடிதம் பெறப்பட்டு, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆளுநர் த.வெ.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 11 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், விரைவில் சட்டசபையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share