வீட்டுக் காவலில் நயினார் நாகேந்திரன் .. பாசிசத்தின் உச்சம்- விஜய் மீது எடப்பாடி பாய்ச்சல்!

By Mathi

|

Published on 24 Nov 2026, 10:41 AM

EPS Nainar Vijay

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை முதல்வர் விஜய் அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதற்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் தவெக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

உடனடியாக இத்தகைய அடக்குமுறைகளைக் கைவிட்டு, சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துகிறேன்! இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel