மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

பாஜக-சங் பரிவார் அரசியலை வீழ்த்த வேண்டும் என்பதில் கூட்டணியின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது என மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில், 59 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று (மே 5) நேரில் சந்தித்தனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன், தேமுதிக பொருளாளர் சுதீஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ப. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள், “முக்கியமான அரசியல் முடிவுகளை விசிக மற்றும் இடதுசாரிகள் இணைந்தே எடுப்போம். அதிமுக மற்றும் பாஜக-சங் பரிவார் அரசியலை வீழ்த்த வேண்டும் என்பதில் எங்கள் கூட்டணியின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியினர் தவிர கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share