முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தற்போதைய முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் சட்டப்பேரவை முடிந்ததும், அங்கிருந்து விஜய் ஸ்டாலின் வீட்டுக்கு புறப்பட்டார்.
சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்துக்கு கான்வாய் வாகனத்துடன் வந்தடைந்தார்.

முதல்வர் விஜய் வருகையையொட்டி ஸ்டாலின் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர்.
விஜய் உள்ளே வந்ததும் அவரை ஆரத்தழுவி வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார்.
பின்னர் விஜய், ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து ஸ்டாலினும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உதயநிதி விஜய்க்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து முதல்வர் விஜய், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமர்ந்து கலந்துரையாடினர். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்.

அரசியல் மோதல்களுக்கு அப்பாற்பட்டு, இந்த சந்திப்பு ஒரு முதிர்ச்சியான அரசியல் நாகரிகமாக பார்க்கப்படுகிறது.
