ஸ்டாலின், வைகோவை சந்திக்கும் முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

Vijay to meet MK Stalin Vaiko

தமிழக முதல்வர் விஜய் இன்று மே 11ந்- தேதி முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற செல்கிறார். இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

தமிழ்க முதல்வராக நேற்று விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின்னர் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட 3 கோப்புகளில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். பின்னர் தலைமைச் செயலகத்துக்கு முதல் முறையாக சென்று அவர் தமது பணிகளைத் தொடங்கினார்.

ADVERTISEMENT

17-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் விஜய் உட்பட புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை விஜய் சந்தித்து வாழ்த்துப் பெற இருக்கிறார். சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் தமது தவெகவுக்கும் இடையேதான் போட்டி; திமுக ஒரு தீயசக்தி என கடுமையாக விமர்சித்திருந்தார் விஜய். முதல்வராக நேற்று பதவியேற்ற பின்னரும் முந்தைய திமுக அரசு ரூ10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுவிட்டது எனவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் முதல்வரான விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான வைகோ உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற இருப்பது கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share