MLA ஆக முடியாமல் பரிதவித்த அமைச்சர்.. சட்டசபையில் சுவாரசியம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

keerthana

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை எடுத்து வராததால், இன்று சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கவில்லை.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, தமிழக முதல்வர் விஜய்க்கு பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, விஜயின் அமைச்சரவையில் நேற்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த வரிசையில், சிவகாசி தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்தனா அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஆனால் இன்று, அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை எடுத்து வர மறந்துவிட்டதால் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கவில்லை. சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share