முதலமைச்சர் விஜய் பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக முதல்வர் விஜய் இன்று பெரம்பூர் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் நேற்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார். சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராகப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, தமிழக முதல்வர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு ஆகியோர் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share