தமிழகத்தில் 17 ஆவது சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் நேற்று (மே 11)தமிழக முதல்வராக பதவியேற்றார்.
இதனையடுத்து முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார். அதில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப் பொருள் குற்றங்களைத் தடுக்க 65 போதைப் பொருட்கள் தடுப்பு படை அமைத்தல்
ஆகியவற்றுக்காக முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் தமது பணிகளை தொடங்கினார் முதல்வர் விஜய். தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று தமிழக சட்டமன்றத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து, தற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர்.
